எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்! - Seithipunal
Seithipunal


பல்வேறு சட்டப்போராட்டங்களுக்கு பின் இரு தினங்களுக்கு முன் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி கே பழனிச்சாமி பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு புதுச்சேரி முதல்வர், N.R. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரெங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அதிமுக தலைமை கழகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி இன்று காலை (30.3.2023 -வியாழக் கிழமை), புதுச்சேரி மாநில முதலமைச்சரும், N.R. காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவருமான திரு. ந. ரெங்கசாமி அவர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அதற்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்தச் செய்தி வெளியிடப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry Cm wish AIADMK EPS for GS


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->