#செங்கல்பட்டு : புதுச்சேரியிலிருந்து ரூ.80,000 மதிப்புள்ள 2,840 மது பாட்டில்களை கடத்தி வந்த இருவர் கைது!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் இருந்து செங்கல்பட்டுக்கு ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 2,840 மது பாட்டில்களை காரில் கடத்தி வந்த இருவர் கைது. மது பாட்டில்களை பறிமுதல் செய்தது மதுவிலக்கு பிரிவு காவல்துறை.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இருந்து தமிழகத்திற்கு மது பாட்டில்களை கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காரணம் என்னவென்றால், தமிழ்நாட்டை விட புதுச்சேரியில் மதுவின் விலை குறைவு. அதனால் சிலர் புதுச்சேரியில் இருந்து குறைந்த விலைக்கு மது பாட்டில்களை வாங்கி சட்ட விரோதமாக தமிழகம் கொண்டு வந்து அதிக விலைக்கு விற்பது வழக்கம்.

செங்கல்பட்டு மாவட்டம் சூணாம்பேடு செல்லும் மாநில நெடுஞ்சாலையில் புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வருவதாக செங்கல்பட்டு மாவட்டம் மதுவிலக்கு துணை காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தீவிர வாகன சோதனையில் அதிகாலையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்.

புதுச்சேரியில் இருந்து ஆத்தூர் நோக்கி வந்த காரை மடக்கிய போது, காரில் இருந்த வாலிபர் தப்பி ஓடி உள்ளார். காரை சோதனை செய்து பார்த்தபோது 30 ( கேஸ் மதுபாட்டால்கள் )அட்டைகளில் சுமார் ரூ.80,000 மதிப்புள்ள 2,840 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து காரை ஓட்டி வந்த வானூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை பிடித்து காவல்துறை விசாரித்த போது, காரில் இருந்து தப்பி ஓடியது சூணம்பேடு பகுதி சேர்ந்த தங்கராஜ் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் காவல்துறை இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry liquor bottles smuggling 2 persons arrest


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->