அடடா அருமை - ஆலமரத்தை அலேக்காக இடம் மாற்றிய போலீசார்.! குவியும் பாராட்டு.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி : பழமையான ஆலமரம் ஒன்றை, வேருடன் அகற்றி மற்றொரு இடத்தில் நட்டு வைத்த காவல்துறையினர் அதிகாரிகளுக்கு வனத்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

மேலும் அந்த பகுதி பொதுமக்கள் காவல்துறையினரின் இந்த செயலுக்கு தங்களது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

புதுச்சேரி மூலகுளம் பகுதியில் புதிய காவல் நிலையம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதில் அந்த காவல் நிலையம் அமைய உள்ள இடத்தில், 15 வருட பழமையான ஒரு ஆல மரத்தை அகற்ற வேண்டிய சூழ்நிலை வந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் அந்த ஆல மரத்தை வேருடன் பெயர்த்து மற்றோரிடத்தில் நடுவதற்கு முயற்சி செய்தனர்.

அதன் படி, அந்த ஆல மரத்தை வேருடன் ஜேசிபி எந்திரம் உதவியுடன் பெயர்த்தெடுத்து, அதே பகுதியில் உள்ள ஏரி அருகே நட்டு வைத்தனர்.

காவல்துறையினரின் இந்த செயலுக்கு வனத்துறை அதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். மேலும் பொதுமக்களும் தங்களது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Puducherry police moved the tree


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->