ஆவின் ஊதா நிற பால் பாக்கெட்டில் குறைவாக இருக்கும் பால் அளவு: பொதுமக்கள் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


சென்னையில் ஆவின் டிலைட் ஊதா நிற பால் பாக்கெட்டுகளில் 100 கிராம் எடை குறைவாக உள்ளது. மேலும் 520 கிராம் பால் பாக்கெட் எடை 415 கிராம் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

மாதாவரம், மூலக்கடை ஆகிய பகுதிகளில் வினியோகம் செய்யப்படும் பால் பாக்கெட் அளவு குறைவாக உள்ளதை முகவர்கள் கண்டுபிடித்தனர். 

அரை லிட்டர் பால் பாக்கெட்டில் 130 கிராம் குறைவாக இருந்தது. பாலின் அளவை குறைப்பதற்கு காரணம் என்ன. எந்த ஒரு பொருளும் குறிப்பிட்ட அளவில் தான் பாக்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

ஆனால் ஆவின் பால் பாக்கெட்டில் எதற்காக அளவை குறைக்கிறார்கள். இதனால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு மளிகை கடை, பெட்டி கடைகளில் தகராறு செய்கின்றனர். 

இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்க மாநில தலைவர் தெரிவித்திருப்பதாவது, ''கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை, கோவை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆவின் பால், தயிர் போன்றவை எடை குறைவான அளவில் விநியோகம் செய்யப்பட்டது. 

தற்போது மீண்டும் ஊதா நிற பால் பாக்கெட்டில் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இது போன்ற அளவை குறைத்து மோசடி செய்வது கண்டிக்கத்தக்கது'' என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

purple colored aavin milk quantity less public shocked


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->