சிறுநீரகக் கோளாறால் பரிதாபமாக உயிரிழந்த சிறை கைதி.!  - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள, திருவிடைமருதூர் பகுதியில் வசித்து வந்த சர்புதீன் ( வயது 62) என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக பூந்தமல்லியில் பகுதியில் இயங்கி வருகின்ற தேசிய பாதுகாப்பு முகமை காவல்துறையால் கொலைவழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டார். 

அதன் பின், சர்புதீனை போலீசார் பூந்தமல்லி சிறப்புக்கிளைச் சிறையில் வைத்து விசாரித்து வந்தார்கள். இதற்கு நடுவில் சிறுநீரக கோளாறு போன்ற பாதிப்புகளால் கடந்த சில மாதங்களாக சர்புதீன் அவதிப்பட்டு வந்துள்ளார். 

இதை அடுத்து கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி சர்புதீன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அன்று இவர் இரவே அவருக்கு உடல்நிலை மோசமானதை தொடர்ந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சர்புதீன் சேர்க்கப்பட்டார்.

அங்கே சிகிச்சை பெற்று வந்த சர்புதீன் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பற்றி புழல் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puzhal criminal died In stanly hospital


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->