மாணவர்களின் எழுத்து திறனை பாதிக்கும் காலாண்டு தேர்வு - ஆசிரியர்கள் வலியுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


பள்ளிக்கல்வித்துறை கல்வி முறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, மாணவர்களின் கல்வித்திறனை மட்டுமல்லாமல், அவர்களின் உடல் நிலை, உணவு முறை, குடும்ப விவரம் என, பல்வேறு கேள்விகள் கேட்கப்படுவதால், ஆசிரியர்கள் எப்போதும் செல்போனும், கையுமாகவே இருக்கின்றனர். 

இந்நிலையில் மாணவர்களுக்கு காகிதம் இல்லாமல் காலாண்டு தேர்வு நடத்த கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த புதிய திட்டம் குறித்து திருப்பூர் மாவட்டஆசிரியர்கள் சிலர் தெரிவித்தாவது:- 

"பள்ளிக்கல்வித்துறை கொண்டு வரும் முயற்சிகள் மாணவர்களின் கல்வியை வளர்க்கும் வகையில் இருந்தால் அதை நாங்கள் நிச்சயம் வரவேற்கிறோம். ஆனால் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு செல்போன் எடுத்து வரக்கூடாது என்று தெரிவிக்கும் கல்வித்துறை, மொபைல் மூலம் தான் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள அறிவுறுத்துகிறது.

கல்வித்துறையின் பல்வேறு நடவடிக்கையால், மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க இயலாத நிலை ஏற்பட்டு வருகிறது. தற்போது, 1 முதல் 3-ம் வகுப்பு வரை, காலாண்டு தேர்வினை காகிதம் இல்லாமல் வாய்வழியாக நடத்த அறிவுறுத்துகிறது.

மொபைலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள கேள்விகளை மாணவர்களிடம் கேட்டு அவர்கள் கூறும் பதில்களின் அடிப்படையில் மதிப்பீடுகளை மொபைலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தின் மூலம், மாணவர்களின் எழுத்து திறமை மறைந்து போகும் அபாயம் உள்ளது. 

ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சி மிக அவசியம். ஆனால் அவர்களுக்கு தேர்வை காகிதம் இல்லாமல் நடத்த சொல்வதால் மாணவர்களின் எழுத்துத் திறன், சிந்தனைத் திறன் அனைத்தும் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. இந்த நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

quarterly exam educational department order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->