மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கு அக்டோபர் மாதம் 10ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், மெட்ரிக் பள்ளிகளுக்கு வரும் 9ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர் கருப்பசாமி தெரிவித்துள்ளார். 

மேலும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான தசரா பண்டிகை விடுமுறை இன்றுடன் நிறைவு பெறுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். நாளை பள்ளிகளை திறப்பதா அல்லது விடுமுறை தொடர்வதா என்று குழப்பம் நிலவியதையடுத்து மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர் கருப்பசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி காலாண்டுத் தேர்வு முடிவடைந்ததையடுத்து, அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு 6ம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

quarterly exam holiday extention in matriculatiopn schools


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->