தமிழகத்திற்கு ரயில்வே பட்ஜெட் 8 மடங்காக அதிகரிப்பு - அமைச்சர் ஜிதேந்திர சிங்.!
railway budget 8 fold increase to tamilnadu
மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை வெளியிட்டு சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "ரயில்வே பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட மாநிலங்களில் தமிழகம் ரூ.6,362 கோடியை பெற்றுள்ளது.
6 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாலும், 77 மாதிரி அம்ரித் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டதாலும் மாநிலம் பயனடைந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது தமிழகத்திற்கான ரயில்வே பட்ஜெட் எட்டு மடங்கு அதிகரித்து, ரூ. 879 கோடியிலிருந்து ரூ .6,362 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த உயர்வு மாநிலத்தின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை காட்டுகிறது. பெண்கள் தலைமையிலான நிர்வாகத்துக்கு மோடி அரசு முன்னுரிமை அளித்துள்ளது. பெண்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதில் இருந்து பெண்கள் தலைமையிலான முயற்சிகளை தீவிரமாக ஆதரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த முக்கியமான நோக்கத்தை முன்னெடுத்துச் செல்ல பட்ஜெட்டில் ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் 2024-25 இல் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பங்கு நிதி ஆதரவில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பிரதிபலிக்கிறது" என்றுத் தெரிவித்தார்.
English Summary
railway budget 8 fold increase to tamilnadu