1000 கி.மீ அங்கிட்டு தேர்வு மையம் ஏன்? ரெயில்வேத் துறை கொடுத்த விளக்கம்!
Railways Loco Pilot Exam Southern Railway
தெற்கு ரெயில்வேயின் உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு இரண்டாம் கட்டத் தேர்வு மார்ச் 19ம் தேதி நடைபெற உள்ளது. முதல் கட்டத் தேர்வு அருகாமையிலேயே நடத்தப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட தேர்விற்கு தெலுங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு தேர்வர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தால், பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ரெயில்வே துறையை கண்டித்தன. மேலும், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், ரெயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதி தேர்வு மையங்களை தமிழகத்திலேயே ஒதுக்க கோரினார்.
இதற்கிடையில், ரெயில்வே தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதன் விளக்கத்தில், "உதவி லோகோ பைலட் தேர்வு அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால், அவர்கள் வசிப்பிடத்திற்கு அருகிலேயே மையங்களை ஒதுக்க முயற்சி செய்யப்பட்டது. இருப்பினும், வசதிக்கேற்ப சிலர் அண்டை மாநிலங்களில் எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் எந்தவித பாகுபாடும் இல்லை; இது வழக்கமான நடைமுறையாகும்" என தெரிவித்துள்ளனர்.
மேலும், இட ஒதுக்கீட்டுப் பிரிவு தேர்வர்கள் ரெயில்வேயில் இலவசப் பயணத்திற்கான பாஸ் பெற முடியும் எனவும் ரெயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
English Summary
Railways Loco Pilot Exam Southern Railway