தென் மாவட்டங்களில் மழை வெள்ள மீட்பு பணிகள் நிறைவு.!!
Rain flood rescue work completed in southern districts
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் பகுதிகளில் மீட்பு பணிகள் நிறைவடைந்ததாக தலைமை செயலாமர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் "தென் மாவட்டங்களில் அதி கனமழையால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து ௪௯,707 பேர் மீட்கப்பட்டனர். இவர்கள் 67 முகாம்களில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளார். அவர்களுக்கு 5 லட்சம் உணவு பொட்டலங்கள் 249 லாரிகளில் 1200 மெட்ரிக் டன் 81 டன் உணவு பொருட்கள் ஹெலிகாப்டர் மூலம் வழங்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பால் விநியோகம் சீரானது.
காவல்துறையில் 1400 பேரும், ராணுவ, கடற்படை 167 என 3,400 பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட 95% நியாயவிலை கடைகள் சரி செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் நிறுவனங்கள், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மூலம் தென் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. தென் தமிழகத்தில் பெய்த அதி கனமழையால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 318 கால்நடைகள் 2,587 ஆடுகள் இறந்துள்ளன, 2035 குடிசைகள், 1.85 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளது. போர்கால அடிப்படையில் நிவாரண பணிகள் நடைபெறுகிறது. சேதாரங்கள் கணக்கிடப்பட்டு விரைவில் நிவாரணம வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
English Summary
Rain flood rescue work completed in southern districts