ஏழு மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க போகும் மழை.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக பல்வேறு பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதிலும் மலைப்பகுதியான நீலகிரி பகுதிகளில் கனமழை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rain to seven districts in tamilnadu


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->