11 மாவட்டங்களுக்கு வந்த எச்சரிக்கை! முதலிடம் பிடித்த சீர்காழி! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 11 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், தி.மலை, வேலூர், தஞ்சை, புதுக்கோட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 11 மாவட்டங்களில்  பகல் 1 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 24 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சிதம்பரத்தில் 23 செ.மீ., வேளாங்கன்னியில் 22 செ.மீ., திருவாருர், நாகையில் தலா 21 செ.மீ., கொள்ளிடம், புவனகிரியில் தலா 19 செ.மீ., நன்னிலத்தில் 17 செ.மீ., சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை முதல் சென்னை, செங்கல்பட்டு, டெல்டா உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்மழை பெய்து வருகிறது.

இந்த தொடர் மழையால் மக்கள் எந்தவித பாதிப்புமின்றி பாதுகாப்பாக இருப்பதை அரசு தரப்பில் அணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rain Update Weather update Tamilnadu 812024


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->