வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி; தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம்..!
Rain warning Meteorological Department
வங்கக் கடலில் உருவாயியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் காரணமாக, தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கக் கடல் பகுதி, தென்மேற்கு பகுதி, தமிழக கடலோரம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரத்தை ஒட்டிய பகுதிகளில், நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வரும் நிலையில், தற்போது தமிழக மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியில் உள்ளது.
குறித்த காற்றழுத்த தாழ்வு இன்று அதே பகுதியில் வலுவிழக்க கூடும் என்று எதிரிபார்க்கப்படுகிறது.அத்துடன், லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில்,தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும், வட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 30ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தின் வட கடலோரம், தெற்கு ஆந்திரா கடலோரம், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசும் என்றும் கூறப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Rain warning Meteorological Department