மழை நீர் சேமிப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.. பத்து ரூபாய் சட்ட இயக்கம் வலியுறுத்தல்!  - Seithipunal
Seithipunal


 அரசு அலுவலகத்தில் நிலத்தடி நீரை மட்டும் பெருக்க  மழை நீர் சேமிப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று புதுச்சேரி பத்து ரூபாய் சட்ட இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி பத்து ரூபாய் சட்ட இயக்கம்  நிறுவனர்ரகு என்கின்ற ரகுநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:புதுச்சேரி மாண்புமிகு மாவட்ட ஆட்சியர் அவர்கள் மரம் வளர்க்க வேண்டும் என்று தெரிவிக்கிறார் சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்கும் என்பதற்காக ஆனால் புதுச்சேரியில் சிறந்த முறையில் பணியாற்றக்கூடிய ஒரே துறை வன பாதுகாப்பு துறை ஏனென்றால் அதிகமாக மரத்தை வெட்ட அனுமதி கொடுப்பது இந்த துறை தான் வன பாதுகாப்பு துறை என்று கூறுகிறது . பாதுகாப்பு எங்கே மரம் யாரிடம் போய் புகார் சொல்வது மரத்தின் புகாரை கேட்க யார் இருக்கிறார். 

சில   கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் அவர்கள் அலுவலகத்தில் இருக்கும் மரத்தை வெட்டுவதற்கு அனுமதி கேட்கிறார்கள் அனுமதி கொடுக்கிறது மரத்தை வளர்க்க வேண்டும். என்று மக்களுக்கு அறிவுரை கூறும் அரசு ஏன் அரசு அதிகாரிகளுக்கு அறிவுரை கூறுவதில்லை. மக்களுக்கு இடையூறாக சாலையில் இருந்தால் எடுக்கலாம் விபத்தை ஏற்படுத்தக் கூடிய மரமாக இருந்தால் எடுக்கலாம் ஒன்றுமே இல்லாத மரத்தை ஏன் எடுக்க வேண்டும். உயர் மின்னழுத்த பாதையில் செல்லும் மரத்தை அப்புறப்படுத்தி மாற்று இடத்தில் வைக்கலாம். கழிவுநீர் கால்வாய்க்கு இடையூறாக இருந்தால் எடுக்கலாம். 

ஆனால் நமது புதுச்சேரி வனத்துறை மட்டும்தான் வேற இருக்கக் கூடாது. என்று நினைத்துதான் மரத்தை முழுவதும் அகற்றப் பட்டு வருகிறது. அவசர தேவை இருந்தால் மட்டுமே மரத்தை எடுக்க அனுமதி வழங்க வேண்டும் இல்லை என்றால் அனுமதி வழங்கக் கூடாது. மரத்தில் பேனர் வைக்க ஆணி வைக்கப்படுகிறது அதையும் கண்காணிக்க வேண்டும் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். இந்த தலைமுறையிலே இருக்கும் மரத்தை அகற்றாமல் அடுத்த தலைமுறைக்கு தேவைப்படும் விதமாக அரசு செயல்பட வேண்டும்.

 அடுத்த தலைமுறைக்கு மாசு இல்லாமல் நம்மளால முடிந்த ஒரு சிறு உதவி வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தினால் போதாது அதற்காக அரசு அலுவலகத்தில் உள்ள மரத்தை வெட்ட அனுமதி 90% வழங்கக் கூடாது. அரசு அலுவலகத்தில் நிலத்தடி நீரை மட்டும் பெருக மழை நீர் சேமிப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று புதுச்சேரி பத்து ரூபாய் சட்ட இயக்கம் சார்பில் வலியுறுத்துகிறோம் என  ரகு என்கின்ற ரகுநாதன் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rain water harvesting should be implemented Ten-rupee legal movement urges


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->