10 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை "மழை தொடரும்"..! வானிலை மையம் தகவல்...!
Rain will continue till 4 pm in 10 districts of Tamil Nadu
தமிழ்நாட்டில் மாலை 4 மணி வரை 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இடி, மின்னலுடன் கூடிய மீதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தற்பொழுது தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும் மாலை 4 மணி வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வருகின்ற 29ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, வடமேற்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Rain will continue till 4 pm in 10 districts of Tamil Nadu