சென்னையில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழை! சென்னை 2.0 பேக்கேஜ் பலனால் தண்ணீர் தேங்கவில்லை!
Rainwater does not stagnate in Chennai
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை செங்கல்பட்டு உள்ள பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதேபோன்று தலைநகரான சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை வெளுத்து வாங்கியது. அதேபோன்று நந்தனம், கே.கே நகர், ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தவெளி, அடையாறு உள்ளிட்ட பல இடங்களில் கன மழை காரணமாக சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இதன் காரணமாக சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா நள்ளிரவு முழுவதும் மழை நீர் வெளியேற்றும் பணிகளை அதிகாரிகளுடன் சேர்ந்து களத்தில் நின்று ஆய்வு செய்தார். எவ்வளவு மழை நீர் தேங்கினாலும் இரவோடு இரவாக அகற்றப்பட வேண்டும் என மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனால் துரிதமாக செயல்பட்ட அதிகாரிகளும் பணியாளர்களும் மழை நீரை அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சென்னையில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழை நீர் காலையில் காணவில்லை.
வடகிழக்கு பருவமழை தொடங்கி சில நாட்களிலேயே சென்னையில் பெய்த மழைக்கு அதிகாரிகளின் உதவியுடன் மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. சென்னை மழைநீர் வடிகால்வாய் பணிகள் 95% நிறைவு பெற்றதாக தெரிவித்த சென்னை மேயர் பிரியா தற்பொழுது களத்தில் இறங்கி மழை நீர் அகற்றும் பணியை மேற்பார்வையிடுகிறார். சென்னை மழைநீர் வடிகால்வாய் பணிக்காக பல கோடி ரூபாய் செலவு செய்த நிலையில் ஒரு நாள் மழைக்கு சென்னை சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுதான் திமுக அரசு கொண்டு வந்த சென்னை 2.0 திட்டமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
English Summary
Rainwater does not stagnate in Chennai