கும்பகோணம் ரவுடி ராஜாவின் 'மரண தண்டனை' வழக்கில் திடீர் திருப்பம்! - Seithipunal
Seithipunal


கும்பகோணம் நீதிமன்றம், பல்வேறு கொலை வழக்குகளில் தொடா்புடைய ராஜாவுக்கு மரண தண்டனையும், ஆறுமுகம் மற்றும் செல்வம் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும் விதித்திருந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை ராஜாவுக்கு மரண தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாகவும், ஆறுமுகம் மற்றும் செல்வம் ஆகியோரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தும் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகேயுள்ள திப்பிராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகன் செந்தில்நாதன். இவரை, 2013-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி இவரது நண்பரான திருவாரூா் மாவட்டம், ஆலங்குடி பகுதியை சோ்ந்த ராஜா மற்றும் இவரது தாய்மாமன்களான திப்பிராஜபுரத்தைச் சோ்ந்த ஆறுமுகம், மனோகரன், மைத்துனா் மாரியப்பன், தம்பி செல்வம் ஆகியோர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா்.

இது குறித்து பட்டீசுவரம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, இந்த விவகாரத்தில் தொடர்புடைய ராஜா மற்றும் இவரது தாய்மாமன்களான திப்பிராஜபுரத்தைச் சோ்ந்த ஆறுமுகம், மனோகரன், மைத்துனா் மாரியப்பன், தம்பி செல்வம் ஆகியோரை கைது செய்தனா்.

காவல்துறையினர், மேற்கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, ராஜா மீது ஏற்கெனவே 10 கொலை வழக்குகள் உள்பட 17 வழக்குகள் நிலுவையில் இருந்து தெரிய வந்தது. இதன் பின்னர், இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே, மாரியப்பன் மற்றும் மனோகரன் ஆகிய இருவரும் இறந்துவிட்டனா்.

இந்த நிலையில், இந்த வழக்கில், ராஜாவுக்கு மரண தண்டனையும், ஆறுமுகம் மற்றும் செல்வம் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 12,000 அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றம் மதுரை கிளையில், தண்டனையை குறைக்கக் கோரி ராஜா, ஆறுமுகம், செல்வம் ஆகியோர் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ராஜாவின் மரண தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாகவும், ஆறுமுகம் மற்றும் செல்வத்திற்கு ஆயுள் தண்டனை உறுதி செய்தும் உத்தரவு பிறப்பித்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

raja death sentence commuted life imprisonment


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->