விழாகோலம் பூண்ட தஞ்சை | மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாட்டம்!
RajaRaja Cholan 1037 birth Day
சோழப் பேரரசர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு, தஞ்சையின் பெரிய கோவிலில் உள்ள ராஜராஜ சோழன் சிலை மற்றும் நகரத்தின் முக்கிய இடங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
மாமன்னன் ராஜராஜசோழனின் 1037-வது சதய விழா பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சியுடன் தொடங்கியுள்ள நிலையில், தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தஞ்சை பெரிய கோவில் முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரிக்கப்பட்டு ஜொலித்துக் கொண்டிருக்கிறது.
ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் சோழ மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்தார். அந்த நாள் அவருடைய பிறந்த நாளாக அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037 ஆம் ஆண்டு சதய விழாவை முன்னிட்டு, அரசு சார்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் கொண்டாட இருக்கிறது.
விழாவை முன்னிட்டு நாளை (2-ந்தேதி) ராஜராஜசோழனின் சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், ஆன்மிக சொற்பொழிவு, பரிசளிப்பு விழா உள்ளிட்டவை நடைபெறவுள்ளது.
இதையடுத்து, நவம்பர் 3-ந் தேதி காலை தேவார நூலுக்கு சிறப்பு பூஜைகளும், ஓதுவார்களின் வீதியுலாவும் நடைபெறுகிறது. அதன் பின்னர் கோவிலுக்கு அருகே உள்ள மாமன்னன் ராஜராஜசோழனின் சிலைக்கு கோவில் நிர்வாகம், மாவட்டம் நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருக்கின்றனர்.
மேலும், ராஜராஜசோழன், உலோகமாதேவி ஐம்பொன் சிலைகள் முன்பு புனித நீர் அடங்கிய கலசங்கள் வைத்து சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் நடத்தி, பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெறவுள்ளன. இரவு ராஜராஜசோழன் மற்றும் உலோகமாதேவிக்கு அலங்காரம் செய்யப்பட்டு, வீதியுலா நடைபெறவுள்ளது.
English Summary
RajaRaja Cholan 1037 birth Day