ஜூன் 20ஆம் தேதி தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.!!
Rajnath Singh coming to Tamil Nadu on June 20
நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை துவங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக பாஜக நாடு முழுவதும் 9 ஆண்டுகால பாஜக ஆட்சியின் விளக்க பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறது.
அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையில் போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையையும் பரபரப்பும் ஏற்பட்டது.
குறிப்பாக தமிழகத்தை ஆளும் திமுக அரசுக்கும் மத்தியிலாலும் பாஜக அரசுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. அமித்ஷா தமிழகம் வருகை நிறைவடைந்த அடுத்த நாளே திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி அவரை கைது செய்துள்ளது. இந்த நிலையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழகம் வர உள்ளார். அதன்படி வரும் ஜூன் 20ம் தேதி சென்னை அடுத்த தாம்பரத்தில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.
அடுத்தடுத்து மத்திய அமைச்சர்களின் தமிழக வருகை தமிழக அரசியல் வட்டாரத்தில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்தி வருகிறது. மத்திய அமைச்சர் அமித் ஷாவை பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திப்பார்கள் என செய்தி வெளியான நிலையில் அவ்வாறு எந்த ஒரு சந்திப்பும் நடைபெறவில்லை. தமிழகத்தில் பாஜகவிற்கு வலிமை சேர்க்கும் வகையில் இந்த பயணங்கள் அமைவதால் கூட்டணி கட்சிகளே மத்திய அமைச்சர்களுடனான சந்திப்பை தவிர்த்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Rajnath Singh coming to Tamil Nadu on June 20