ராமநாதபுரம் || ரூ.1.35 கோடி மதிப்புடைய கடல் அட்டைகள் பறிமுதல்..!!
rameshwaram coast guard seized Sea cucumber worth of Rs1crore
ராமநாதபுரம் மாவட்டத்தை அடுத்த ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அரிய வகை கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக கடலோர காவல் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்ட கடலோர காவல் படையினரை கண்டதும் ஆத்தங்கரை கடற்கரை பகுதியில் இருந்த கடத்தல் கும்பல் தப்பி சென்றது.
இதனைத் தொடர்ந்து ஆத்தங்கரை கடற்கரை பகுதியில் கடத்தலுக்காக வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகளை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிய வகை கடல் அட்டைகளின் சந்தை மதிப்பு சுமார் ரூ. 1.35 கோடி இருக்கும் என கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தலைமறைவான கடத்தல்காரர்களை கடலோர காவல் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
rameshwaram coast guard seized Sea cucumber worth of Rs1crore