5 நாட்களுக்கு பின் கடலுக்கு செல்லும் மீனவர்கள்: பரபரப்பில் ராமேஸ்வரம் துறைமுகம்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த வாரம் தென் மாவட்டங்களில் கனமழையும் கடலோர மாவட்டமான ராமநாதபுரத்தில் பரவலான மழையும் பெய்தது. 

18 ஆம் தேதி வங்க கடலில் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என தடை விதிக்கப்பட்டது. 

இதனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் வேலை இல்லாமல் தவித்தனர். மேலும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான விசைப்படகுகள், நாட்டு படகுகள் போன்றவை கரையோரமாக பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டது. 

இந்நிலையில் தற்போது மழை காற்றின் வேகம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் 5 நாட்களுக்கு பிறகு இன்று அதிகாலை மீன்பிடிப்பதற்காக கடலுக்குள் செல்ல மீன்வளத்துறை சார்பில் மீனவர்களுக்கு அனுமதி டோக்கன் வழங்கப்பட்டு தடை நீக்கப்பட்டதால் ராமேஸ்வரம் துறைமுகம் மீண்டும் பரபரப்பாக மாறி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rameshwaram fishermen after 5 days returned sea


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->