நாயால் உடல் நசுங்கி பலியான கல்லூரி மாணவன்! பெரும் சோகம்! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டையில் நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நவல்பூரி பகுதியில் இருந்து பைக்கில் கல்லூரிக்கு சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

சாலையின் நடுவே திடீரென வந்த நாய் மீது மோதாமல் இருக்க உடனடியாக பிரேக் அடித்த மாணவன், பைக்கில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து உள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி மாணவர் மீது ஏறி இறங்கியதில் மாணவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ranipet road accident college student spot out


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->