தடையில்லா சான்று வழங்க லஞ்சம் - தேனியில் சிக்கிய வட்டாட்சியர்.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டி பகுதியில் புதிதாக பெட்ரோல் பங்க் துவங்குவதற்கு தடையில்லா சான்று வழங்க மதுரையை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் ஆண்டிப்பட்டி வருவாய் வட்டாட்சியர் காதர் ஷெரீப்பை அணுகியுள்ளார். 

அதற்கு ஷெரிப் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதனை விரும்பாத சுப்பிரமணி போலீசில் புகார் கொடுத்ததன் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரிடம் 1 லட்சம் ரூபாய் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பினர்.

அதனை சுப்பிரமணி வட்டாட்சியரிடம் கொடுத்தபோது லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் வட்டாட்சியர் ஷெரிப்பிடம் விசாரணை நடத்திய போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் உடனடியாக வட்டாட்சியரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அவர் உடல் நலம் தேறினார். இதையடுத்து அவர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினரால் தேக்கம்பட்டி பகுதியில் உள்ள தேனி மாவட்ட சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RDO arrested for bribe in theni


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->