சென்னையில் இந்த பகுதியில் தண்ணீர் தேங்கும் - அமைச்சர் கே.என்.நேரு!
Ready to face monsoon Water will stagnate in this area Minister KN Nehru
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாகவும், திருச்சி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் முன்னேற்பாட்டு பணிகள் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், அனைத்து பகுதிகளிலும் ஆகாய தாமரையை அகற்றி விட்டதாக தெரிவித்த அவர், சென்னையில் ரூ.22 கோடி மதிப்பில் புதிய எந்திரம் வாங்கப்பட்டு அனைத்து வாய்க்காலிலும் தூர்வாரப்பட்டு வருவதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், எவ்வளவு மழை பெய்தாலும் தாங்கக்கூடிய அளவிற்கு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் அனைத்து இடங்களிலும் முடிந்து விட்டதாக தெரிவித்தார்.
மேலும், 20 செ.மீ., 25 செ.மீ. மழை பெய்தால் எந்த வடிகாலுக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது என்றும், அதிகமாக மழை பெய்தால் கணேசபுரம் சுரங்கப்பாதையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு மழை நீர் தேங்கும். தண்ணீர் தேங்கினால் மோட்டார் வைத்து உடனே அகற்றப்படும் என்று கூறியுள்ளார்.
English Summary
Ready to face monsoon Water will stagnate in this area Minister KN Nehru