இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த  ஒருவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்து பெட்ரோல் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் தொழில்கள் பாதிப்படைந்து அத்தியாவசிய பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றன.

அதன் காரணமாக இலங்கை அரசுக்கு எதிராக கொழும்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் விலை உயர்வு வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இலங்கை தமிழர்கள் கள்ளப்படகு மூலம் கடல் வழியாக தனுஷ்கோடிக்கு வந்து தஞ்சமடைய வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 27ம் தேதி இலங்கையில் இருந்து இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்குஅகதிகளாக வந்த 2 முதியவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பரமேஸ்வரி என்ற அகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

refugee from Sri Lanka has died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->