பிராந்திய மொழி சார்ந்த துறை மாணவர்கள் தொடர்ந்து புறக்கணிப்பு.. அரசு பணி நியமன தேர்வாணைய செயலர் மீது புகார்!
Regional language department students continue to boycott Complaint against Public Service Commission Secretary
புதுச்சேரி மாநிலத்தில் நிரப்பப்படும் அரசு பணி நியமனங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் பிராந்திய மொழி சார்ந்த துறை மாணவர்களை தொடர்ந்து திட்டமிட்டு புறக்கணிக்கும் அரசு பணி நியமன தேர்வாணைய செயலர் அவர்கள் நடவடிக்கைகள் கண்டிக்கது என சட்டமன்ற உறுப்பினர் திரு. மு. வைத்தியநாதன் கூறியுள்ளார்.
புதுச்சேரி சட்ட பேரவையில் பூஜ்ய நேர விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர் திரு. மு. வைத்தியநாதன் அவர்கள் பேசியதாவது. புதுச்சேரி மாநிலத்தில் நிரப்பப்படும் அரசு பணி நியமனங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் பிராந்திய மொழி சார்ந்த துறை மாணவர்களை தொடர்ந்து திட்டமிட்டு புறக்கணிக்கும் அரசு பணி நியமன தேர்வாணைய செயலர் அவர்கள் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கதாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து அரசு பணி நியமனங்களில் தமிழ்,தெலுங்கு,மலையாளம் பிராந்திய மொழியில் படித்த தேர்வாளர்களுக்கு எதிராக அரசு பணி நியமன தேர்வாணையம் நடந்து வருகிறது.
ஏற்கனவே நடந்து முடிந்த பொதுப்பணித்துறை பணி நியமனம், ஊர்க்காவல் படை தேர்வு உள்ளிட்ட பல்வேறு பணி நியமனத் தேர்வுகளில் பிராந்திய மொழிகள் பாடம் முறைக்கு எதிராக அரசு பணி நியமன தேர்வாணையம் செயல்பட்டது.
குறிப்பாக ஊர்காவல் படை தேர்வு விவகாரம் உயர் நீதிமன்றம் வரை சென்று எட்டு நீதியரசர்கள் விசாரணை நடத்தி முறைகேடாக தேர்வு நடந்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். இதற்கு தார்மீக பொறுப்பேற்று தேர்வாணைய செயலர் அவர்கள் பதவி விலக வேண்டும் ஆனால் அவர் தொடர்ந்து பிராந்திய மொழிகளில் கேள்வித்தாள் தயாரிப்பதை எதிர்த்து செயல்பட்டு வருகிறார்.
புதுச்சேரி மாநில மாண்புமிகு முதல்வர் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள துறையான போக்குவரத்து துறையில் கடந்த 10.02.2025 அன்று உதவி மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கான பணி நியமன ஆணை வெளியிடப்பட்டது. இப்பணி நியமன ஆணை தமிழ்,தெலுங்கு,மலையாளம் பிராந்திய மொழியில் கல்வி பயின்ற பொறியாளர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்பதவிக்கான தேர்வு இதற்கு முன்பாகவே 10.11.2022 அன்று அறிவிப்பானை வெளியிடப்பட்டு நடத்த முடியாத காரணத்தினால் மீண்டும்
தற்போது நடத்தப்படுகிறது. 10.11.2022 அன்று அறிவித்த அறிவிப்பாணையில் வினாத்தாள் இரு மொழிகளிலும் (அதாவது ஆங்கிலத்தில் மட்டுமன்றி) ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்று (தமிழ் அல்லது தெலுங்கு அல்லது மலையாளம்) தேர்வுகளை எழுத இயலும், தேர்வர்கள் தங்களது விருப்ப மொழியை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்பொழுது இரண்டாவதாக அதே பணி நியமனத்திற்கு வெளியிடப்பட்ட அரசாணையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிராந்திய மொழி தேர்வுத்தாள்களை நீக்கி இத்தேர்வு வெறும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இது பிராந்திய மொழியில் படித்த தேர்வாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் அச்சத்தையும் உருவாக்கி உள்ளது. 3 வருடமாக பிராந்திய மொழிகளில் தேர்வுக்கு தயாரான தேர்வாளர்கள் இதனால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். அரசு பணி நியமன தேர்வு என்பது அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும் அவ்வாறு நடத்தப்படாத எந்த ஒரு தேர்வும் சமநிலை தேர்வாக கருத முடியாது.
ஏற்கனவே நடத்திய தேர்வுகளில் பிராந்திய மொழிகளை புறக்கணித்ததனால் உதவி ஆய்வாளர் பணி நியமனம் என்பது 20 ஆண்டுகள் தள்ளிப் போனதை யாரும் மறந்திருக்க முடியாது .அதே சூழ்நிலைதான் இன்று ஊர்க்காவல் படை தேர்வில் நடந்து வருகிறது, ஆனால் தொடர்ச்சியாக ஏற்க முடியாத காரணங்களை கூறி தாய்மொழி புறக்கணிப்பு என்பது ஏற்றுக்கொள்வதாக இல்லை. எனவே மாண்புமிகு முதல்வர் அவர்கள் இவ்விஷயத்தில் தலையிட்டு பிராந்திய மொழிகளில் வருங்காலங்களில் தேர்வுகளை நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
English Summary
Regional language department students continue to boycott Complaint against Public Service Commission Secretary