சாலை வசதி இல்லாத அவலநிலை.. இறந்தவரை டோலி கட்டி கண்ணீருடன் தூக்கி சென்ற உறவினர்கள்.!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமுத்தூர் அருகே ஜவ்வாது மலை பகுதியில் அமைந்துள்ள சீங்காடு கிராமத்தைச் சேர்ந்த சுலோச்சனா. இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சுலோச்சனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் அவரது உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் சொந்த ஊரான சீங்காடு கிராமத்திற்கு ஏற்றி சென்றனர். மலை கிராமமான சீங்காட்டிற்கு சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இறந்த சுலோச்சனா உடலை பாதி வழியிலேயே இறக்கி விடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் டோலி கட்டி இறந்தவரின் உடலை இரண்டு கிலோ மீட்டர் தூரம் உறவினர்கள் கண்ணீர் மல்க அழுது கொண்டே சுமந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீங்காடு கிராமத்திற்கு சாலை வசதி கோரி பலமுறை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சமீபத்தில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் உள்ள மலை கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்த சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மலை கிராமத்திற்கு சாலை வசதி மற்றும் ஆம்புலன்ஸ் வசதியை வேலூர் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Relatives carried body due to lack of road facilities


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->