பெப்சி, கோகோ கோலாவுக்கு ஆப்பு.. ரிலையன்ஸ் வசமாகும் காளிமார்க் நிறுவனம்.!! - Seithipunal
Seithipunal


ரிலையன்ஸ் நிறுவனம் குளிர்பான சந்தையில் கால் பதிக்க தொடங்கியுள்ளது. ரிலையன்ஸ் குழும நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் கடந்த ஆகஸ்ட் மாதம் பியூர் டிரிங்க்ஸ் குழுமத்திடமிருந்து கேம்ப கோலாவை முழுமையாக வாங்கியது.  கேம்ப கோலா 1970 முதல் இந்தியாவின் பிரபலமான குளிர்பான பிராண்டாக இருந்து வருகிறது.

கடந்த 1990ம் ஆண்டு உலகமயமாக்கல் நடவடிக்கைக்குப் பிறகு கோகோ கோலா மற்றும் பெப்சி நிறுவனங்களின் குளிர்பானங்கள் இந்திய சந்தையை ஆக்கிரமித்த நிலையில் கேம்ப கோலாவின் சந்தை சரிந்தது. தற்போது கேம்ப கோலாவை ரிலையன்ஸ் குழுமம் வாங்கி மீண்டும் அதை இந்தியாவின் முதன்மை குளிர்பான பிராண்டாக மாற்றும் முயற்சியை ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

தற்போது மற்ற நிறுவனங்களைவிட 30 சதவீத குறைவான விலையில் கேம்ப கோலா குளிர்பானத்தை ரிலையன்ஸ் சில்லறை வர்த்தகத்தில் விற்பனை செய்து வருகிறது. இதனால் கோகோ கோலா, பெப்சி நிறுவனங்கள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன.  கேம்ப கோலாவைத் தொடர்ந்து குஜராத்தின் புகழ்பெற்ற குளிர்பான நிறுவனமான சோஸ்யோ ஹஜூரியின் 50 சதவீதப் பங்குகளை கடந்த ஜனவரி மாதம் ரிலையன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இதற்கிடையே கேம்ப கோலா தயாரிப்பு விநியோகம் மற்றும் விற்பனை சார்ந்து உள்ள சிக்கலைகளை தீர்க்கவும் தமிழ்நாட்டில் தனது குளிர்பான சந்தையை உருவாக்க காளிமார்க் நிறுவனத்தின் பெருமளவிலான பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் மற்றும் காளிமார்க் இடையே இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. காளிமார்க் நிறுவனம் கடந்த 1916ம் ஆண்டு விருதுநகரில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். பவன்டோ காளிமார்க் நிறுவனத்தின் புகழ்பெற்ற குளிர்பானமாகும். காளிமார்க் நிறுவனத்தின் பெரும் பங்குகளை வாங்குவதன் மூலம் காளிமார்க்குக்கு சொந்தமான 8 ஆலைகளில் கேம்ப பிராண்ட் குளிர்பானத்தைத் தயாரிக்கவும், காளிமார்க் நிறுவனத்தின் பவன்டோ, காளிமார்க் சோடா உள்ளிட்ட தயாரிப்புகளை தொடர்ந்து விற்பனை செய்யவும் ரிலையன்ஸ் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Reliance going to buy kalimark Company shares


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->