7 தமிழர்கள் உயிர் இழப்பு, நிவாரணம் அளிக்கப்படும? !! - Seithipunal
Seithipunal


குவைத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிட தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் 7 பேர்  தமிழர்கள். அவர்களின் உடல்களை சென்னைக்கு எடுத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

குவைத் நகரில் கட்டிட தீ விபத்தில் தமிழர்கள் 7 பேர் உயிரிழந்தது பற்றி அதிர்ச்சியையும் வேதனையையும் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், இறந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொண்டதோடு மட்டுமில்லாமல், தீ விபத்தில் உயிர் இழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

அந்த விபத்தில் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ,மேலும் தமிழகத்தில் இருந்து தனி விமானம் மூலம் ஊழியர்களின் உடல்களை கொண்டு வந்து அவர்களது குடும்பத்தினரிடம் விரைவில் ஒப்படைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்யும் என  ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் தமிழக அரசுக்கு தரப்படும் என்று குவைத்தில் உள்ள தூதரகம் அறிவித்துள்ளது. குவைத்தின் மங்காஃப் நகரில் உள்ள கட்டிடத்தில்கடந்த 12ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 40 இந்தியர்கள் உட்பட 49 வெளிநாட்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் மேலும் 50 பேர் காயமடைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

relief fund for the families of deceased in kuwait fire incident


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->