ஏரி ஆக்கிரமிப்பு! மொத்தம் 391 வீடுகள்! வீடுகளை அகற்ற பணியில் அதிகாரிகள்!
reported that the authorities are removing the houses built encroaching on the lake
ஆவடி அருகே ஏரியை ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலிஸ் உதவியுடன் வீடுகளை அப்புறப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆவடியை எடுத்த நடுக்குதகையில் சுமார் 51 ஏக்கர் நிலப்பரப்பில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. அந்த ஏரியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் பல ஆண்டுகளாக ஏரி நிலத்தை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் மற்றும் வீடுகள் கட்டப்பட்டு குடியிருந்து வருகின்றனர்.
திருவள்ளுவர் மாவட்ட பொதுப்பணித்துறை நிர்வாகம் ஏரியை ஆக்கிரமித்து கட்டி உள்ள வீடுகளை அகற்ற உத்தரவித்துள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் விசாரணை செய்தலில் 391 வீடுகள் சுமார் 15 ஏக்கர் ஏரியை ஆக்கிரமித்து கட்டி இருப்பது தெரியவந்துள்ளது.
அதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களை காலி செய்யக்கோரி வீடுகளுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதற்கு இடையில் மேலும் சிலர் புதியதாக வீடுகளை கட்டி இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
ஏரியை ஆக்கிரமித்து வீடுகளை கட்டியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும் காலி செய்யாததால், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் உதவியுடன் நடுக்குத்தகை பெரிய ஏரியில் கட்டிய 10க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிடங்களை இடித்து அகற்றினர்.
English Summary
reported that the authorities are removing the houses built encroaching on the lake