குடியரசு தின விழா :: 2 நாட்களுக்கு அண்ணா சதுக்கம் செல்ல பொதுமக்களுக்கு தடை..!! - Seithipunal
Seithipunal


குடியரசு தினத்தையோட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள தலைவர்கள் நினைவிடங்களை பார்வையிட இன்று மற்றும் நாளை முற்பகல் வரை அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குடியாசு தின விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் நாள் சென்னை, மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கமாகும்.

தற்போது அந்த இடத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் பணிகள் நடைபெற்று வருவதால், இந்தாண்டு மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்து கொள்ளும் குடியரசு தினவிழா மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெறவுள்ளது.

எனவே, பாதுகாப்பு காரணங்களால் இன்று முதல் நாளை முற்பகல் வரை அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Republic Day celebration bans public from entering Anna Square for 2 days


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->