சென்னையில் மின்சாரம் தாக்கி ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னையில் மின்சாரம் தாக்கி ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மின்வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர் ராதாகிருஷ்ணன்.

இவர் வசிக்கும் பகுதியான சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் மின் பழுது ஏற்படும்போது அதனை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏ.கே.சாமி தெருவில் மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மற்றொரு பகுதியில் இருந்த மின்மாற்றியை மின்வாரிய ஊழியர்கள் இயக்கியதால் மின்சாரம் பாய்ந்து ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியரை மின் பராமரிப்பு பணியில் ஈடுபடுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Retired power plant worker killed by lightning in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->