மக்களே உஷார்! தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்த எடுக்காதீங்க! ஓய்வு பெற்ற பேராசிரியரிடம் ரூ. 84.40 லட்சம் மோசடி! - Seithipunal
Seithipunal


காவல்துறை அதிகாரி போல் நடித்து ஓய்வு பெற்ற பேராசிரியரிடம் ரூ. 84.40 லட்சம் மோசடியில் ஈடுபட்ட டெல்லி வாலிபரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மோசடி கும்பல்கள் ஆன்லைன் மூலம் தொடர்ந்து பல்வேறு நபர்களிடம் பல்வேறு முறையில் நூதன மோசடியில் ஈடுபட்டு பணப்பரிப்பில் ஈடுபட்டு வருவது தொடர்ந்து அதிகரித்துள்ளது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை மோசடி கும்பல்கள் தவறாக பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆன்லைன் மோசடி குருத்து காவல்துறையினர் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கெங்கவார்பட்டி சேர்ந்தவர் பானுமதி. இவர் ஓய்வு பெற்ற பேராசிரியர் என்று கூறப்படுகிறது. இவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென இவ்வாறு செல்போன் இருக்கு கடந்த மே 18ஆம் தேதி அழைப்பு வந்துள்ளது.

ஓய்வு பெற்ற பேராசிரியரிடம் பேசிய அந்த மர்ம நபர் மும்பை காவல் நிலையத்தில் இருந்து பேசுவதாக கூறி மோசடியை தொடங்கியுள்ளார். பின்னர் உங்கள் எண்ணை பயன்படுத்தி புதிய செல்போன்கள் வாங்கி அந்த எண்ணை பயன்படுத்தி பண மோசடி நடந்துள்ளது. எங்களுக்கு உங்கள் மீது சந்தேகம் உள்ளதால் உங்களை விரைவில் கைது செய்ய தமிழ்நாடு வர உள்ளோம் என்று  ஓய்வு பெற்ற பேராசிரியரும் பானுமதியை அந்த மர்ம நபர் மிரட்டி உள்ளார்.

இதனால் அச்சமடைந்த பானுமதி, பேசியவர் காவல்துறை அதிகாரி  என்று நம்பி அவரிடம் உதவி கேட்டதாக கூறப்படுகிறது. இதனை நன்கு பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்  கைது செய்யாமல்  இருப்பதற்கு குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு பணம் அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி உதவி பேராசிரியர் அந்த குறிப்பிட்ட வங்கி கணக்கு எண்ணிற்கு பல்வேறு தவணைகளாக ரூ.84.50 லட்சம் வரை அனுப்பி உள்ளார். அதன் பின்னர் அந்த மர்ம நபரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்பதால் ஓய்வு பேராசிரியர் பானுமதி சந்தேகம் அடைந்துள்ளார்.

அதனையடுத்து இது தொடர்பாக தேனி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சைபர் கிராம் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். 

இந்த நிலையில் டெல்லி துவாரகாவில் வசித்து வந்த அபிஜித்சிங் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ. 44 ஆயிரம் ரொக்க பணம். 5 செல்போன்கள் ஒரு லேப்டாப் 103 டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட், 28 காசோலை புத்தகங்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். அதன் பின்னர் அபஜீத்சிங்கை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

retired professor pretending to be a police officer was charged Rs 84 lakh fraud


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->