அரசு ஊழியர்கள் கையில் எடுத்த அஸ்திரம்..!! தேர்தல் பணிக்களுக்கு ஆப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு வருவாய் துறை அலுவலர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான வருவாய்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். 

விடிய விடிய நடைபெற்ற இந்த காத்திருப்புப் போராட்டம் போன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகங்களிலும் நடைபெற்றது. 

அந்த வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட வருவாய் துறை அலுவலர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் எனவும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை புறக்கணிப்போம் எனவும் அறிவித்துள்ளனர். 

இந்த அறிவிப்பால் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் பணி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் மௌனம் காப்பதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Revenue dept staffs demand 10 points who involved in election work


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->