வேற லெவல்! மொத்தம் ரூ.4000 கோடி! 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
RoadWays TN Transport Tamilnadu Assembly TNGovt
ஒருநாள் விடுமுறைக்குப்பின் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கின. பேரவை தொடங்கியதும் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்
இந்நிலையில், 4000 கோடி ரூபாயில் மேலும் 10,000 கிராம சாலைகள் மேம்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சட்டப்பேரவை 110 விதியின் புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது வெளியிட்டு வருகிறார்.
தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம். நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து வளர்ச்சிகளையும் உள்ளடக்கியதாக திராவிட மாடல் அரசு இருந்து வருகிறது.
தமிழ்நாட்டிற்கு சாலை வளர்ச்சி மிக முக்கியமானது. அதன்படி ‘முதல்வரின் கிராம சாலை’ திட்டத்தின் கீழ் 10,000 கிலோ மீட்டர் ஊரக சாலைகள் அமைக்க ரூ.4,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் இன்றைய கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் ஒருவர் கூட இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை.
மேலும், தமிழக சட்டப்பேரவை இன்றைய கூட்டத்தை முழுமையாக அதிமுக புறக்கணித்துள்ளது. கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரம் தொடர்பாக அவை நடவடிக்கைகளை அதிமுக புறக்கணித்து உள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், அதிமுக தரப்பில் இன்று தமிழக முழுவதும் கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து போராட்டம் நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
RoadWays TN Transport Tamilnadu Assembly TNGovt