ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : போலீசாரின் 'ரகசிய' விசாரணையில் சம்போ செந்தில் ..?! - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5 ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் போலீசார் இதுவரை 16 பேரை கைது செய்துள்ளனர். 

இந்த கொலையில் திமுக, அதிமுக, பாஜக, தமாகா  என்று அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் தொடர்புள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.  இந்நிலையில் அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் அளித்த தகவலின் படி வெங்கத்தூர் கூவம் ஆற்றில் உடைத்து வீசப்பட்ட 5 செல்போன் பாகங்கள் மீட்கப் பட்டுள்ளன.

மேலும் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய பல்வேறு ரவுடிகள் ஒன்றிணைந்து திட்டம் தீட்டி செயல்படுத்தியுள்ளனர். இந்தக் கொலையில் தொடர்புடைய முக்கிய ரவுடியான சீசிங் ராஜா ஆந்திராவில் பதுங்கி உள்ளதாகத் தெரிய வந்ததையடுத்து, தனிப்படையினர் ஆந்திரா விரைந்துள்ளனர். 

இதனிடையே சம்போ செந்தில் என்ற மற்றொரு ரவுடிக்கும் இந்த கொலையில் தொடர்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 4 கொலை வழக்குகளில் கடந்த 15 ஆண்டுகளாக பிடிபடாமல் தலைமறைவாக உள்ள சம்போ செந்தில், இருந்த இடத்தில் இருந்தே தமிழகத்தில் கொலைகளுக்கு திட்டம் தீட்டியுள்ளதாகத் தெரிகிறது. 

பழைய பொருட்களை வாங்கி விற்கும் தொழிலைக் கைப்பற்றுவதில் ஏற்பட்ட போட்டி காரணமாக சம்போ செந்தில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இவரை 2 தினங்களுக்கு முன்பே உ. பி. யில் உள்ள நொய்டாவில் போலீசார் கைது செய்துள்ளதாகவும், ரகசிய இடத்தில வைத்து விசாரித்து வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rowdy Sambo Senthil in Police Secret Custody in Armstrong Murder Case


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->