நான் நெனச்சா சீமான் கட்சி பெயரையே பயன்படுத்த முடியாது - அலறவிட்ட ஆர்.எஸ்.பாரதி.!
rs bharathi speech about ntk leader seeman
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஜோதிபுரம் மைதானத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, இளைஞா்களின் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஆர்.எஸ்.பாரதி, ”மகளிருக்கு எண்ணற்ற திட்டங்களை முதல்வா் கொண்டு வந்துள்ளாா்.
எம்.ஜி.ஆருக்கு மக்கள் வந்தது போல், இப்போது மு.க ஸ்டாலினுக்கும் கூட்டம் அதிகமாக வருகிறது. நாம் தமிழா் கட்சியை நடத்தி வந்த சி.பா.ஆதித்தனார், 1969ஆம் ஆண்டு திமுகவில் இணைத்துவிட்டாா். கட்சி கலைக்கப்பட்டுவிட்டது.
ஆகவே, சட்டப்படி நாம் தமிழா் என்ற பெயரில் சீமான் கட்சி நடத்தக் கூடாது. நான் நீதிமன்றத்தை நாடினால் அந்தப் பெயரையே இனி பயன்படுத்த முடியாது. சீமான் தனது படத்துடன் பிரபாகரன் படத்தை ஒட்டிவைத்து தமிழக இளைஞா்களை ஏமாற்றி வருகிறாா்.
பரந்தூா் விமான நிலைய திட்டத்திற்கு இடம் வழங்க மக்கள் தயாராக உள்ளனர். விமான நிலைய விவகாரத்தில் முழுமையாக விசாரிக்காமல் விஜய் பேசி வருகிறார். பரந்தூர் பகுதி வாக்குச்சாவடியில் அனைத்துக் கட்சிகளையும் விட திமுகவுக்குத்தான் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன என்றது தெரிவித்துள்ளார்.
English Summary
rs bharathi speech about ntk leader seeman