இரட்டை அர்தத்தில் பேசிய ஆசிரியர் - மாணவிகள் செய்த அதிரடி செயல்..!
teacher suspend for speech double meaning words in kallakurichi
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நான்கு முனை சந்திப்பு அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் கள்ளக்குறிச்சி மட்டுமின்றி கச்சிராயப்பாளையம், சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்த அன்பழகன் என்பவர் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக மாணவிகள் தங்களின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அதிகாரி மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஆசிரியர் அன்பழகனை துறை ரீதியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். பள்ளியில் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
teacher suspend for speech double meaning words in kallakurichi