கத்தார் to சென்னை.. வசமாக சிக்கிய நபர்.. அதிகாரிகளுக்கு ஷாக்.!!
Rs11 Crs worth Drug seized in Chennai airport
சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் உட்பட ஐந்து பேரை தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த போதைப் பொருள் சிக்கிய பிறகு நாடு முழுவதும் அனைத்து விமான நிலையங்களும் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை விமான நிலையத்திலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இன்று கத்தாரில் இருந்து வந்த பயணியிடம் சந்தேகத்தின் பெயரில் விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்து 11 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் வகை போதை பொருள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அதனை பறிமுதல் செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ள அதிகாரிகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? யாருக்காக கொண்டுவரப்பட்டது? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Rs11 Crs worth Drug seized in Chennai airport