₹ 27 கோடி ரொக்கம்; 18 கிலோ தங்கம்! மொத்தமாக அள்ளிய ஐ.டி! ஜெகத்ரட்சகனுக்கு இறுகும் பிடி!
Rs27 crores and 18kg gold bars seized from Savita Education Group related places
முன்னாள் மத்திய இணை அமைச்சரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் பல்வேறு தொழில்களை செய்து வரும் நிலையில் அவர் தனது வருமானத்தை முறையாக கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததை அடுத்து கடந்த 5 நாட்களாக தமிழகம் முழுவதும் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான சும்மா 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக டெல்லியில் இருந்து வந்த வருமான வரித்துறை ஆணையர் சுனில் குப்தா ஜெகத்ரட்சகன் வீட்டில் விசாரணை நடத்தி வருகிறார். ஜெகத்ரட்சகனின் மருமகன்கள் இளமாறன் மற்றும் நாராயணசாமி ஆகியோர் தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்ட முக்கிய சொத்து ஆவணங்களை அடிப்படையாக கொண்டு அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகன் வீட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறான பரபரப்பான சூழலில் ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகளால் பெருமளவில் பணம் மற்றும் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான சவிதா கல்வி குழுமம் தொடர்புடைய இடங்களில் இருந்து சுமார் 27 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 18 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்துள்ளதாக வருமானவரித்துறை தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் இருந்து பணம் மற்றும் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்படுவது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Rs27 crores and 18kg gold bars seized from Savita Education Group related places