மதுரையில் கடந்த 3 நாட்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.72,000 அபராதம் வசூல்.! - Seithipunal
Seithipunal


மதுரையில் கொரோனா தொற்றுப்பரவலை தடுக்கும் வகையில் முகக் கவசம் அணியாதவா்களிடம் கடந்த 3 நாட்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.72,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வருவதையடுத்து மாநகராட்சி நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 100 வாா்டுகளிலும் பொது இடங்களில் தனி நபா்கள் மற்றும் நிறுவனங்களில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் முகக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் மாநகராட்சிக்குள்பட்ட நூறு வாா்டுகளிலும் முகக்கவசம் அணிவதை கண்காணிக்கும் வகையில் மாநகராட்சிக்குள்பட்ட 5 மண்டலங்களிலும் மண்டல வாரியாக கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் கண்காணிப்புக்குழுக்கள் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டன. 

இதில் மதுரையில் பொது இடங்களில் கடந்த 3 நாட்களில் முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரிந்த பொதுமக்களிடம் ரூ.72,000 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rs.72,000 fine collected from those who did not wear face mask in last 3 days in Madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->