ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி! தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் 33 இடங்களில் RSS அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் என்று, தமிழக காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அக்டோபர் 22 மற்றும் 29ம் தேதிகளில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக காவல்துறை தரப்பில், "பேரணியால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. விண்ணப்பத்தில் போதிய தகவல்கள் குறிப்பிடவில்லை" என்று வாதம் வைக்கப்பட்டது.

மேலும், இந்த அணிவகுப்பால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் அளிக்க வேண்டும் என்றும் காவல்துறை வலியுறுத்தியது. 

இதனை கேட்டு கொண்ட உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள நிபந்தனைகளை பின்பற்றி அணிவகுப்பு நடத்தலாம் என்று தெரிவித்தது.

மேலும், சீருடை இல்லாமல் பேரணியில் யாரையும் அனுமதிக்கக்கூடாது என ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு ஒரு உத்தரவையும் உயர்நீதிமன்றம் பிறப்பித்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RSS Riot Chennai high courtorder jh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->