நாம் தமிழர் கட்சி சாட்டை துரைமுருகன் அதிரடி கைது! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை பிரபல youtuber, நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவருமான சாட்டை துறைமுகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

முதல் கட்ட தகவலின் படி விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட சாட்டை துரைமுருகன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறான கருத்துக்களை பேசியதாக அவர் மீது திமுகவினர் புகார் அளித்துள்ளனர்.

மேலும் தற்போதைய தமிழக அரசு மீதும், தமிழக முதலமைச்சர் மீதும் அவதூறான கருத்துக்களை சாட்டை துரைமுருகன் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இது குறித்து திருச்சி சைபர் கிரைம் போலீசாரிடம் திமுக தரப்பில் புகார் அளிக்கப்படவே, வழக்கு பதிவு செய்த போலீசார் தற்போது சாட்டை துரைமுருகனை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஏற்கனவே இது போன்ற ஒரு சர்ச்சையில் சிக்கிய சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சாட்டை துரைமுருகன் கைதுக்கு நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் கள்ளச்சாராயம் விற்பவன், கஞ்சா விற்பவன், கொலை செய்பவனை எல்லாம் விட்டுவிட்டு, அரசியல் ரீதியாக கருத்து சொல்பவர்களைத்தான் தமிழக போலீஸ் கைது செய்யும் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Saattai Durai Murugan arrested Trichy police


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->