உடுமலைபேட்டையிலும் கள்ளச்சாராய விற்பனை! மாவடப்பு ராமன் மீது வழக்கு பதிவு! - Seithipunal
Seithipunal


உடுமலை அருகே மாவடப்பு  மலை கிராமத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த ராமன் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை அருகே மஞ்சநாயக்கனூர் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் ஆனைமலை ஒன்றிய பாஜக செயலாளர். அவர் நேற்று முன்தினம் திடீரென வாந்தி,வயிற்றுப்போக்கு ஏற்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மாவடப்பு மலைகிராமத்தில் இருந்து கடந்த 27ஆம் தேதி சாராயம் வாங்கி குடித்ததும் அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.

அது தொடர்பாக விசாரணை தொடங்கிய காவல்துறை சாராயம் விற்றது யார் என்று தீவிர விசாரணை நடத்தியவர். இதில் மாவடப்பு மலை கிராமத்தைச் சேர்ந்த ராமன் என்பவர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sale of bootleg liquor in Udumalpet


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->