சேலத்தில் பயங்கரம்: ரத்தம் தெறிக்க, ஓட ஓட ரௌடி வெட்டி கொலை! பெரும் பதற்றம்! - Seithipunal
Seithipunal


சேலம்: பனங்காடு பேருந்து நிறுத்தம் அருகே, பகலிலேயே ரௌடி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம், வெள்ளியம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பட்டறை சரவணன் (வயது46). இவர் மீது காரிப்பட்டி காவல் நிலையத்தில் கொலை முயற்சி தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இன்று காலை அரூர் மெயின் சாலையில் பனங்காடு பேருந்து நிறுத்தம் அருகே வந்த சரவணனை, பின்னால் வந்த மர்ம கும்பல் ஓட ஓட வெட்டிக் கொலை செய்தனர். இதில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த காரிப்பட்டி போலீசார், சரவணனின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு உடல் சோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பிரபல ரௌடி கரட்டுர் ஆனந்தனின் ஆதரவாளர்கள் இந்த கொலையில் தொடர்புடையவர்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலைக்குப் பின்னர் மேட்டுப்பட்டி, சுக்கம்பட்டி மற்றும் வெள்ளாளகுண்டம் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி, அப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem Rowdt saravanan hacked to death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->