சங்கமம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா..விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள்!
Sangamam Arts and Science College Annual Day Medals and certificates to the winners of the sports competition!
விழுப்புரம் மாவட்டம். அன்னமங்கலம் சங்கமம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 17வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழாவில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த அன்னமங்கலம் கிராமத்தில் இயங்கி வரும் சங்கமம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 17ம் ஆண்டு விழா, கல்லூரியில் உள்ள மகாத்மா காந்தி கூட்டரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தலைவர் அரசு வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி துணைத் தலைவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜி.பரமசிவம், கல்லூரி செயலாளர், தேவி பரமசிவம் மற்றும் கல்லூரி பொருளாளர் செல்வி கிருஷ்ணன், ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் முனைவர் கே.ஹரிகுமார், அனைவரையும் வரவேற்றார். சென்னை உயர்நீதி மன்ற சிவில் அரசர்பார்த்திபன், மற்றும் தமிழ்த்திரைப்பட நடிகர் குருசோமசுந்தரம் ஆகியோர் சிறப்புரையாற்றினர் விழாவில் மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சி, நடனம் நடைபெற்றது. சுமார் 650 மாணவ மாணவிகளக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அனைத்து மாணவ, மாணவிகள், துறைத்தலைவர்கள், உதவி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கல்வி ஆண்டிற்காக விருதும் வழங்கப்பட்டது.. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாக அலுவலர் ந.விஜயபாஸ்கர் செய்திருந்தார்.
English Summary
Sangamam Arts and Science College Annual Day Medals and certificates to the winners of the sports competition!