ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.. சரத்குமார் வலியுறுத்தல்.!!
sarath kumar statement for bethel nagar
ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதி மக்களுக்கு பட்டா வழங்கிட அரசு பரிசீலிக்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகர் பகுதியில் 30 வருடங்களுக்கும் மேலாக உள்ள 5000 - க்கும் மேற்பட்ட வீடுகளை நீர்நிலை ஆக்ரமிப்பு பகுதியில் கட்டப்பட்டதாக கூறி, சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வணிக. மற்றும் குடியிருப்புகளை அகற்ற 2015 - இல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நீர்நிலைபகுதிகளில் உருவாகும் ஆக்கிரமிப்புகள் மீது ஆரம்பத்திலேயே அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஓவ்வொரு நேரமும் ஆட்சியாளர்கள் வாக்கினை கவனத்த்தில் வைத்து ஆக்கிரமிப்புகளை கவனிக்காமல் தலைமுறை கடந்த பின்னர் மக்களை துன்புறுத்துவது நியாயமற்றது. இத்தனை ஆண்டுகளாக அரசு சலுகைகள் வழங்கி, அடிப்படை வசதிகள் ஏற்படுத்து கொடுத்து,
அதற்கான வரிவசூலித்து, இருப்பிடத்தில் வசிப்பதற்கு அனைத்து வித அங்கீகாரமும் அளித்துவிட்டு, தற்போது அக்குடியிருப்புகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முனைவது ஏற்புடையதல்ல.
இனி பொதுமக்களை இதுபோன்று இன்னலுக்கு உள்ளாக்காமல்,
ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் உருவாவதை ஆரம்பத்தி லேயே கண்டறிந்து தடை செய்திட வேண்டும். தற்போது 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்த காரணத்தினால் ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகர் பகுதி மக்கள் சூழ்நிலையை அரசு கருணையுடன் பரிசீலித்து, பட்டா வழங்கிட வேண்டுமென அதில இந்திய சமத்துவ மக்கள் கட்டியின் சார்பாக கோரிக்கை முன்வைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
English Summary
sarath kumar statement for bethel nagar