#தமிழகம் | மக்காச்சோள பயிரின் ஊடுபயிராக கஞ்சாவை பயிரிட்ட விவசாயி கைது!
Sathiyamngalam Ganja Farming Case
சத்தியமங்கலம் அருகே மக்காச்சோள பயிரின் ஊடுபயிராக கஞ்சாவை பயிரிட்ட விவசாயியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் கிராம மலைப்பகுதியில் கஞ்சா செடி பயிரிடப்படுவதாக வனத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகளும், போலீசாரம் சோதனை மேற்கொண்டதில், விவசாயி பழனிச்சாமி என்பவரின் வீட்டின் பின்புறம் உள்ள விளைநிலத்தில் மக்காச்சோளத்துடன் ஊடுபயிராக கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டது தெரியவந்தது.
சுமார் 40 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த போலீசார், பழனிசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஒரு மாவட்ட செய்தி : கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியை, அதே பகுதியில் வசிக்கக்கூடிய விஜய் என்ற நாடக காதலன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
மேலும், மாணவி கல்லூரிக்கு சென்று வரும்போது வழிமறித்து தனது காதலை ஏற்க வேண்டும் என்று, தொந்தரவு கொடுத்து வந்துள்ளான் நாடக காதலன் விஜய்.
இந்நிலையில், சம்பவம் நடந்த நேற்று இரவு மாணவியின் வீட்டிற்கு தனது நண்பர்களுடன் வந்த நாடக காதலன் விஜய் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
இதனை அடுத்து மாணவியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், நாடக காதலன் விஜய் மற்றும் அவரின் நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.
English Summary
Sathiyamngalam Ganja Farming Case