சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. தொழிலாளி ஒருவர் பலி.! - Seithipunal
Seithipunal


சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஆலங்குளம் பகுதியில் உள்ள வளையப்பட்டி கிராமத்தில் துலுக்கன்குறிச்சியை சேர்ந்த தவிட்டுராஜன் (வயது 48) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.

மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்று செயல்பட்டு வரும் இந்த பட்டாசு ஆலையில் நேற்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். மாலை 3 மணிக்கு பணி முடியும் நேரத்தில் ஒரு அறையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் அந்த அறையில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட திருவேங்கடம் கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் (வயது 47) என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும்அவருடன் பணியில் ஈடுபட்டு இருந்த வெம்பக்கோட்டை காமராஜர் நகரை சேர்ந்த புவனேசுவரன் (வயது 33) என்பவர் படுகாயத்துடன் உயிர் தப்பினார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sathur cracker factory fire one person death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->