உள் ஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து, திருமாவளவன் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு!  - Seithipunal
Seithipunal


அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு தொடர்பான  உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பெயரில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

உள் ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு இருப்பதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் இதனை சீராய்வு செய்ய திருமாவளவன் பெயரில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அதில், இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் அரசியலமைப்பு சாசனத்தின் வரையறைக்கு எதிராக தீர்ப்பு உள்ளது.

உள்ஒதுக்கீடு மக்கள்தொகையின் அடிப்படையில் வழங்க வேண்டும். 

ஆனால், பட்டியலின, பழங்குடியினர் பிரிவிலுள்ள பின்தங்கிய சமூகத்தினருக்கு உள்ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ஒதுக்கீடுக்கான வரம்பை நிர்ணயிக்க தீர்ப்பில நீதிபதிகள் தவறி விட்டனர் . 

இதர பிற்படுத்தப்பட்டோரில் கிரிமிலேயர் நபர்கள் இருப்பதை போல, பட்டியலின, பழங்குடியினர் மத்தியில் உள்ள வசதிபடைத்த கிரிமிலேயர் நபர்களை கண்டறிந்து, அவர்களை இடஒதுக்கீடு தொகுப்பிலிருந்து நீக்குவதற்கான கொள்கையை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என தீர்ப்பில் கூறியுள்ளது. இயற்கை நீதிக்கு எதிரானது என்று அந்த சுசீராய்வு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SC ST Reservation issue THirumavalavan SC


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->